நடிகர் அஜித் குறித்து பிரபல நடன இயக்குநர் கல்யாண் பேசியிருப்பது தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
நடிகர் அஜித் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வந்த விடாமுயற்சி திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜித்,ஆரவ்,அர்ஜுன் , திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளி வர உள்ளது.
Also Read : STANDUP COMEDY என்ற பெயரில் அவதூறு பேச்சு – கொதித்தெழுந்த செல்வப்பெருந்தகை..!!
இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் பணியாற்றிய நடன இயக்குநர் கல்யாண் அஜித் குறித்து கூறியதாவது :
விடாமுயற்சி படத்தின் ‘சவதீகா’ பாடல் படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்துக்கு 102 டிகிரி காய்ச்சல். இருமிக் கொண்டே இருந்தார். எல்லாரும் அவரை ஓய்வெடுக்க சொன்னோம். ஆனால் 40 டான்சர்கள் இருக்காங்க. இத்தனை டெக்னிஷன்கள் பாதிக்கப்பட கூடாது. நான் அரை மணி நேரத்துல வரேன் எனச் சொல்லி மாத்திரை போட்டுக் கொண்டு வந்து பாடலுக்கு டான்ஸ் ஆடினார் என கல்யாண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.