பாலிவுட் திரையுலகில் இருக்கும் பல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கங்கனா. தமிழ்,ஹிந்தி என பல மொழிகளில் நல்ல பல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வர நிறைய சமூக அக்கறை கொண்டவர் .
நாட்டில் அவ்வப்போது நடக்கும் பல பிரச்சனைகளை தனது பிரச்சனையாக எடுத்துக்கொண்டு சர்ச்சை பேச்சால் பிரச்சனையில் கொள்வது இவருக்கு வழக்கமான ஒன்றாக மாறி விட்டது .
இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ‘Emergency’. இந்தியாவின் முன்னாள் பிரதமராக இருந்து மறைந்த இந்திரா காந்தி ஆட்சியின்போது நிகழ்ந்த பல முக்கிய நிகழ்வுகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
நாட்டின் கம்பீர பெண்ணாக வலம் வந்த இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையப்படுத்தி இந்தத்திரைப்படம் உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது .
ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தை நடிகை கங்கனாவே தயாரித்தது மட்டுமல்லாமல் இயக்கவும் செய்துள்ளார் . மேலும் இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியிருக்கிறார்.
முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது .
கங்கனாவே தயாரித்து இயக்கி நடித்த படம் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மிக பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .
இதோ Emergency படத்தின் டீசர்…