மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
அதிகாலை 4.30 மணி முதலாகவே கோயில் நடை திறக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் நான்கு கோபுரவாசல் வீதியாகவும் அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆர்வமுடன் பக்தர்கள் கோவிலுக்கு அதிகாலையிலிருந்து புத்தாடை அணிந்துவந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்காணோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் அம்மனுக்கும், சுவாமிக்கும் அதிகாலை முதலாகவே பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அம்மன் சன்னதி செல்லும் கோவில் வாசலில் புத்தாண்டை முன்னிட்டு பூ அலங்காரத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர், விநாயகர் திரு உருவம் அலங்கரிக்கப்பட்ட கோலமிட்டுள்ளது பக்தர்கள் அதனை கண்டு ரசித்து செல்கின்றனர்.