திருப்பத்தூர் மாவட்டத்தில், பழங்காலத்தில் தானியங்களைச் சேமித்து வைக்கும் நிலவறைப் போன்ற `பண்டகக் குழி’ கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஆச்சிர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தூய நெஞ்சக்கல்லூரிப் செயல்பட்டு வருகிறது.அந்த கல்லூரியில் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு,பணியாற்றி வருகிறார்.இவருடன் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் என்பவரும் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம்‘‘கொரட்டி கிராமத்தின் அருகே அரசுக்குச் சொந்தமான கனிமம் வெட்டி எடுக்கப்படக்கூடிய ‘மைக்கா’ சுரங்கம் இருக்கிறது. அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் தென்னை மரங்களை நடுவதற்காக ஜே.சி.பி இயந்திரத்தால் பள்ளம் தோண்டினர். அப்போது, திடீரென ஏற்பட்ட வித்தியாசமான பள்ளத்தை கண்டு மக்கள் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பேராசிரியர் ஆ.பிரபு ஆய்வு மேற்கொண்டார்.இது பற்றி பேராசிரியர் ஆ.பிரபு கூறுகையில்,
அந்தக் குழி சாதாரணமானது கிடையாது. பண்டகக் குழி. அதாவது, தானியக் கிடங்கு என்றும் சொல்லலாம். மனித நாகரிக வளர்ச்சியில் ‘வேளாண்மை’ என்பது மிக முக்கியமான நகர்வாகும். அதிலும் குறிப்பாக விளைப்பொருள்களை சேமித்து வைக்கும் பழக்கம் என்பது ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களிடம் இருந்திருக்கின்றன. ஆதிச்சநல்லூர், பொருந்தல் உள்ளிட்ட பல்வேறு அகழ்வாய்வுக்குழிகளில் இருந்து கண்டறியப்பட்ட தானியங்களே இதற்குச் சான்றாகும். என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பருவக் காலங்களில் மீண்டும் விளைவிக்க விதையாகவும் இந்தச் சேமிப்பு பயன்படுத்தப்படுகின்றது. மைக்காமேடு என்ற இந்தப் பகுதியில் இதேபோன்ற 5 குழிகளை கண்டறிந்திருக்கிறோம். தற்போது ஆய்வு மேற்கொண்ட இக்குழியினைத் தவிர்த்து ஏனையக் குழிகள் மூடப்பட்டுவிட்டன. பண்டகக் குழியானது 10 அடி ஆழமும், அதன் உட்புறம் குடையப்பட்டு 13 அடி சுற்றளவு கொண்டதாகவும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் வாயிலானது ஒன்றரை அடி சதுரஅளவு கொண்டதாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. வாயிற் பகுதியின் சுற்றுப்புறத்தினை பலகைக் கற்களை கொண்டு அமைத்திருக்கிறார்கள்.
இவை காற்றும் நீரும் உட்புக முடியாதபடி, இதன் அமைப்பு இருக்கிறது. இக்குழியினுள் சேமித்துவைக்கப்படும் தானியங்கள் வெகுநாள்கள் கெடாமல் பாதுகாப்புடனும் உயிர்ப்புடனும் இருக்கும். இவ்வமைப்பு தமிழர்கள் கண்டறிந்த பாரம்பரிய சேமிப்புக் கிடங்காகும் என்று தெரிவித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த கண்டுபிடுப்பு தொடர்பாக தமிழக அரசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு மேலும் இந்த பகுதியை சுற்றி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3000 ஆண்டுகள் பழைமையான சிறுதானிய கிடங்கு கண்டுபிடிக்கி பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சிரியததை ஏற்படுத்தி உள்ளது.