Live-In Relationship : உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்..
பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றிய முதல் மாநிலமாக உருவெடுத்ததுள்ளது உத்தரகாண்ட்!
இதன்மூலம் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்டவற்றில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என சொல்லிக்கொண்டு ஒரே வீட்டில் வசித்து வருவது பெருகிவிட்டது.
இந்நிலையில், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் அது குறித்து பதிவு செய்ய வேண்டும் என்று உத்தராகண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது சிவில் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வரும் சூழலில், இதற்கான பணிகளை சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், சுதந்திர இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தராகண்ட் தனது சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்தது.
சுதந்திரத்துக்குப் பிறகு உத்தராகண்ட்டில் பொது சிவில் சட்ட மசோதா முதல்முறையாக தாக்கல் செய்யப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
திருமணம், விவாகரத்து, நில உரிமை, வாரிசு உரிமை, தத்தெடுத்தல் ஆகியவை தொடர்பான சட்டங்கள் அனைத்து மதத்தவர்களுக்கும் பொதுவானதாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மசோதாவில் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் (Live-In Relationship) சேர்ந்து வாழ்பவர்கள், அது குறித்து பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் ஒரு மாதத்துக்குள் தங்கள் ஒன்றாக வாழ்வதை பதிவு செய்ய வேண்டும் என்றும்,
அவ்வாறு செய்யத் தவறினால் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறு திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் சட்டபூர்வமானதாகக் கருதப்படும் என்றும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.