வாட்ஸ் ஆப் மற்றும் ஃபேஸ்புக் சேவை பாதிக்கப்பட்டதன் காரணமாக அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பர்கிற்கு சுமார் ரூபாய் 600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் நேற்றிரவு ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் திடீரென முடங்கின. 6 மணி நேரமாக சேவை முடங்கியதால் பயனாளர்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.
வாட்சப், ஃபேஸ்புக் வாயிலாக அலுவல் ரீதியான வேலைகளை செய்துவருவதால் பல்வேறு பெரு நிறுவனங்களும் திணறின. இந்நிலையில் செயலிகள் முடங்கியதை உறுதிசெய்த வாட்ஸ்-ஆப் நிறுவனம்,
“ பலருக்கு எங்களுடைய சேவைகள் கிடைக்காமல் போனதை அறிந்துள்ளோம். அதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்,விரைவில் அது பற்றிய தகவலை இங்கே பதிவிடுகிறோம்” என பதிவிட்டிருந்தது.
இந்த நிலையில், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் சேவை பாதிக்கப்பட்டதையடுத்து அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பர்க்குக்கு சுமார் ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் மார்க் ஸக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு ரூ.52,000 கோடியாகச் சரிந்துள்ளது. அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஃபேஸ்புக் சந்தை மதிப்பு 5 சதவீதம் சரிந்துள்ளது.
அதுமட்டுமின்றி, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.