பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 38லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
கோயில் வளாகத்தில் மீனாட்சி அம்மன் மற்றும் அதனை சார்ந்த உப கோயில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியலின் காணிக்கை எண்ணப்பட்ட நிலையில், அது குறித்த விபரங்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 38லட்சத்து 62ஆயிரத்து 507 ரூபாய் ரொக்கம், 408 கிராம் தங்கம், 503 கிராம் வெள்ளி, 30வெளிநாட்டு பணம் ஆகியவை காணிக்கையாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.