மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கூட்டணியில் குலாவும் மோடி அரசை கேட்க பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா? என அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
ஒவ்வொரு முறையும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வன்னிய சமூக மக்களை பகடைக்காயாக வைத்து, தனது கூட்டணி பேரத்தை வலுப்படுத்த பேரம் பேசி வரும் அய்யா ராமதாசும் அவரது தவப்புதல்வன் அன்புமணி ராமதாசும் தற்போது அடுத்த தேர்தலுக்கு ஆயத்தமாகிவிட்டார்கள்
ஏற்கனவே உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு மூலம் கடந்த பத்து ஆண்டுகளாக மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்பிற்கு செல்லும் வன்னிய சமூக மாணவர்களின் எண்ணிக்கை 10.5% விட அதிகம். தற்போது 10.5%-ஐ அமல்படுத்துவதன் மூலம் மேற்படிப்பில் சேரும் வன்னியர் சமூக மாணவர்கள் எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்திக்கவே வாய்ப்புகள் அதிகம்.
Also Read : அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை – போலீசார் தீவிர விசாரணை..!!
நன்றாய் படித்து வேலைக்கு சென்று வாழ்வில் சிறந்த நிலையை அடையக்கூடிய வாய்ப்புள்ள இளைஞர்களை எல்லாம், பிஞ்சிலேயே சாதிவெறி பாய்ச்சி நன்றாய் செழித்து வளர வேண்டிய அந்த இளைஞர்களை வெறும் களைகளாய் மாற்றிக் கொண்டிருப்பதுதான் பாமகவின் சாதனை
மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என மோடி அரசை கேட்பீர்களா? அதை எல்லாம் நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் என அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.