மே 20ஆம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 16, மே 7, மே 13 என்று நான்கு கட்ட தேர்தல்கள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளன.
ஐந்தாம் கட்ட தேர்தல் வரும் 20ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. 8 மாநிலங்களில் உள்ள 49 மக்களவை தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.
ராகுல்காந்தி, ராஜ்நாத்சிங், ஸ்மிருதிராணி, பியூஸ் கோயல் என பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
49 தொகுதிகளிலும் மொத்தம் 695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவில் களம் காண்கிறார்.
இதே போல மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியில் மீண்டும் களமிறங்கி உள்ளார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார்
மே 20ஆம் தேதி இந்த 49 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் தலைவர்கள் இறுதிக்கட்டப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.