அண்டைமாநிலங்கள் தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சித்து வரும் நிலையில் தண்ணீரைப் பெற்றுத்தர தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், கோவை மாநகர முன்னாள் மேயருமான தா.மலரவன் கடந்த 17ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்த நிலையில் மறைந்த மலரவன் வீட்டுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வருகை தந்தார்.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மலரவன் உருவப்படத்துக்கு அவர் மலர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மலரவனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கடந்த 17ஆம் தேதி மறைந்த முன்னாள் கோவை மேயர் தா. மலரவன் வீட்டிற்கு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மலரவன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த மலரவன், கோவை மேயராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்த காலத்தில்,
பல்வேறு கோவை நகரின் வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுத்தவர் என புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது;-
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சிலந்தை ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ரெட் அலர்ட்..!!
இதனால் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவதுடன், விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.
கர்நாடக அரசும் மேக தாதுவில் தடுப்பணை கட்டும் பணியை தொடங்கி இருக்கிறது.
இதே போல் ஆந்திரா அரசும் பாலாற்றில் தடுப்பணை கட்டும் முயற்சியினை மேற்கொண்டு வருகிறது.
இப்படி அண்டை மாநிலங்கள், தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுப்பதில் குறியாக இருப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை தெரிவித்தார்.
தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடி நடவடிக்கைகளை எடுத்து தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும்,
தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில், பல்வேறு தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமித்தார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆறு தடுப்பணைகள் கட்ட திட்டம் தீட்டப்பட்டது. அதில் ஒன்று கட்டப்பட்ட நிலையில், அடுத்து வந்த திமுக அரசு தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்டதாக அப்போது விமர்சித்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரக்கணக்கான வாக்குகளை திமுக அரசு திட்டமிட்டு நீக்கி உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக இருக்கிறது.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் மொத்தம் 40 இடங்களில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என அப்போது நம்பிக்கை தெரிவித்தார்.