அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி 12 அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
60 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து மொத்தம் எஸ். பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.இந்த நிலையில் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய கோரி வேலுமணி தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
எஸ்.பி வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்ய கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது.
மேலும் 2 ஊழல் வழக்குகளை ரத்துசெய்யக் கோரி எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என தெரிவித்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபத்தை ஐகோர்ட் நிராகரித்ததுள்ளது. அதே சமயம் மத்திய அரசு அனுமதியளித்துள்ளதால் மூத்த வழக்கறிஞர் ராஜு ஆஜராகலாம் என ஐகோர்ட் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து எஸ்பி வேலுமணி சார்பில் மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி தமிழக அரசு தெரிவித்த கோரிக்கைகளை நிராகரித்த சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை தொடங்கவுள்ளது .