பஞ்சாப் அரசு, செப்டம்பர் 20-ம் தேதி முதல் சிறைச்சாலைகளில் கைதிகள் தங்கள் மனைவியுடன் தனியாக நேரத்தை செலவிட அனுமதிக்கும் இரண்டு மணி நேரம் சந்தித்து பேச வரும் நாட்களில் அனுமதிக்கப்படும் என்று பஞ்சாப் அரசு தெரிவித்து உள்ளது.
அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் சிறைகளில் இது போன்ற சந்திப்புகளுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில்தான் கைதிகளுகக்கான இந்த சலுகை அறவிக்கப்பட்டுள்ளது. முதல் முயற்சியாக நேற்று முன்தினம் நன்னடத்தை கொண்ட கைதிகள் 2 மணிநேரம் வரை தனி அறையில் தங்கள் மனைவிகளுடன் நேரத்தை செலவிட அனுமதிக்கப்பட்டனர்.
தர்ன் தரனில் உள்ள கோயிண்ட்வால் சாஹிப் மத்திய சிறை, நபாவில் உள்ள புதிய மாவட்ட சிறை மற்றும் பதிண்டாவில் உள்ள பெண்கள் சிறை ஆகிய 3 பஞ்சாப் சிறைகளில் சோதனை முயற்சி இந்நடைமுறை தொடங்கப்பட்டது.
இந்த திட்டம் அடுத்தகட்டமாக மற்ற சிறையிலிருக்கும் கைதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என பஞ்சாப் காவல்துறை சிறப்பு இயக்குனர் ஹர்ப்ரீத் சிங் சித்து கூறியுள்ளார். இந்த திட்டத்திற்கு கைதிகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. பரிவார் முலாகத் என இந்த திட்டத்திற்கு பெயர் வைத்துள்ளார்கள். இதற்கு குடும்ப வருகை என்று பொருள்.
முதலில் இந்த திட்டத்தின் மூலம், தங்களது நேசத்திற்குரியவர்களை ஒரு மணி நேரம் மட்டுமே சந்தித்து பேச முடியும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் 2 மணி நேரமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கைதிகளின் நன்னடத்தையை அதிகப்படுத்தும், குடும்ப உறவுகளை வலுப்படுத்தும், சிறைகளில் ஒட்டுமொத்த சூழல் அமைப்பை மேம்படுத்தும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் கடுமையான குற்றம் செய்தவர்கள், தீவிரவாதிகள், எச்.ஐ.வி போன்ற தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐந்து பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மனைவி தனியறையில் ஒரு மணி நேரம் சிறையில் இருக்கும் தங்கள் உறவினர்களை சந்திக்க முடியும். நாட்டிலேயே மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக இதுபோன்ற பயணங்களை தொடங்கும் இரண்டாவது மாநிலமாக பஞ்சாப் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.