தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்ரீத் பண்டிகை:உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகையை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம்.
இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக இந்த பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழலில் பாஜக – தமிழச்சி தங்கபாண்டியன்
இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் நேற்று பிறை தென்பட்டதை அடுத்து வரும் ஜூன் 17ம் தேதி பக்ரீத் கொண்டாடப்படும் என்றும் தமிழ்நாடு அரசின் தலைமை காஜி, சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.
இதேபோல், புதுச்சேரி மாநிலத்தில் பிறை தென்பட்டதால், வரும் 17ஆம் தேதி பக்ரீத் கொண்டாடப்படும் அம்மாநில காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்