ஓலா ஸ்கூட்டர்கள் மீது அதன் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வரும் நிலையில் தற்போது மலிவு விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
பெட்ரோல் மற்றும் டைசலில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயங்கி வந்த நிலையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் மோகம் மக்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. அதற்கேற்றாற் போல் பல நிறுவனங்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகிறது.
அந்தவகையில் ஓலா நிறுவனம் அறிமுகபடுத்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மக்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றாலும் காலப்போக்கில் அதன் மீது வாடிக்கையாளர்களை அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் இதுவரை விற்பனை செய்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ரில் நிறைய கோளாறுகள் வருவதாக வாடிக்கையாளர்கள் குறை கூறி வருகின்றனர்.
Also Read : இஸ்ரேல் – ஹெஸ்புல்லா போர் நிறுத்தம் – லெபனானுக்கு திரும்பும் மக்கள்..!!
இப்படி இருக்கும் சூழலில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தற்போது மலிவு விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
ஓலா Gig, ஓலா Gig+, ஓலா S1 Z, ஓலா S1 Z+ | ஆகிய 4 மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஓலா நிறுவனம்.
Gig 39.999, Gig+ ₹49.999, S1Z ₹59.999, S1 Z+ ₹64.999 ஆரம்ப விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஓலா Gig மற்றும் S1 Z முன்பதிவு தொடங்கி உள்ளதாகவும் இதன் டெலிவரி 2025 ஏப்ரலில் இருந்து தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.