ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்துள்ளதால் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் அம்மாவட்டம் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது .
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் சில நாட்களாக பெய்து வந்த கன மழையால் காவிரி ஆற்றின் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது .இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது .
அருவிகளில் நீர் வரத்து அதிகமானதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி குளிக்கவும் விதித்தும் பரிசல் இயக்கவும் தடை விதித்து அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், தற்போது ஒகேனக்கல்லில் நீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது .
கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகமானதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது . அத்துடன் சுற்றுலா பயணிகளுக்கும் பல தடைகள் போடப்பட்டது . இந்நிலையில் வெள்ள அபாயம் குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல்லில் போடப்பட்டிருந்த தடைகளை அம்மாவட்ட நிர்வாகம் நீக்கியுள்ளது .
ஒருவழியாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்ததன் காரணமாக ஐந்து நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும் , குளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இதனால் சுற்றுலா பயணிகள் தற்போது அருவிகளில் மகிழ்ச்சியுடன் நீராடி பரிசல்களில் சென்று ஒகேனக்கல்லின் அழகை ரசித்து வருகின்றனர்.