ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் 6-வது நாளாக இன்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது . இதனால், ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதையடுத்து ஒகேனக்கலில் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும், ஆற்றில் இறங்கவோ, அருவிகளில் குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல்லில் மிகவும் பேமஸ் ஆக பார்க்கப்படும் பரிசல் சவ்வாரிக்கு 6-வது நாளாக தடை விதித்து அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது .