கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார்பில், ‘பாவேந்தர் பாரதிதாசனின்’ 134-வது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது படத்துக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு,சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகரராஜா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: ஓய்வு எடுக்க குடும்பத்தோடு கொடைக்கானல் புறப்பட்ட முதலமைச்சர்
இந்த நிலையில் ,கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்எங்கள் உயிரென்ப தாலே – வெல்லுந்
தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே”
“பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!”
எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்! என்று குறிப்பிட்டுள்ளார்.