தமிழில் தடையற தாக்க என்ற படத்தின் மூலம் நடிகை ரகுல் ப்ரீத் சிங் அறிமுகமானார். அதையடுத்து புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்தார்.ஆனால் தமிழில் எந்த படமும் இவருக்கு எதிர்பார்த்த பெயரை பெற்று தரவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பின்பு 2017 ஆம் ஆண்டு ஸ்பைடர் திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியானது. இந்த படம் மூலம் ரகும் ப்ரீத் சிங்கிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

அதைத் தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார்.

தேவ், என்.ஜி.கே ஆகிய படங்களிலும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் கூடுதல் பிரபலமானார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இந்திப் பட தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானியும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில், கோவாவில் 2024 ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ம் தேதி இந்திப் பட தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானி ரகுல் ப்ரீத் சிங் திருமணம் நடைபெற்றது.

முதலில் சீக்கிய முறைப்படியும் பிறகு இந்து முறைப்படியும் திருமணம் நடந்தது.

தற்பொழுது திருமணத்திற்கு பிறகு நடிகை ரகுல் ப்ரீத் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..