சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன்.பஞ்சமி தாய். அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும்.
சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள்.
ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது.
ஒன்று காசி மற்றொன்று தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ளது. இங்குள்ள வராகி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக உள்ளார். இந்த வராகி அம்மன் என்பவள் அம்பாளின் போர்ப் படைத்தளபதி ஆவாள்.
ராஜராஜசோழன் எச்செயலைத் தொடங்கினாலும், வராகியை வழிபட்ட பின்னரே தொடங்குவார். இதனால் இந்த அம்மனை”ராஜராஜ சோழனின் வெற்றித்தெய்வம் என்று வர்ணிப்பர். தஞ்சைப் பெரியகோயில் கட்டுவதற்கு முன்பே, வராகி வழிபாடு இங்கிருந்ததாகக் கூறுவர்.
மற்ற கோயிலில் எங்கும் இல்லாத ஒரு நடைமுறையும் தஞ்சைப்பெரியகோயிலில் உண்டு. எந்த வழிபாட்டை தொடங்கினாலும், முதலில் விநாயகரை வணங்குவதே மரபு.
இங்கு சிவவழிபாட்டைத் தொடங்குபவர்கள் விநாயகருக்குப் பதிலாக வராகியம்மனை வழிபட்டே தொடங்குகிறார்கள். சோழர்களின் வெற்றிக்குரிய தெய்வம் துர்க்கை. இங்கு துர்க்கையின் தளபதியான வாராகிக்கு சன்னதி உள்ளது.
கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் இவளது சன்னதி உள்ளது. இங்கு என்ன வேண்டிக் கொண்டாலும் உடனே நிறைவேறுகிறது. திருமணமாகாதவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் திருமணவரம் உடனே கைகூடுகிறது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து இத்தலத்து அம்பிகையிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன.
ஸ்ரீ வாராஹி அம்மன் துதி:
ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்யமனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!
தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:
வராஹி மூல மந்திரம்:
ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
4) செல்வம் பெருக
ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வாராஹி தேவியை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
மூலம்:-
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம். ஸ்வாஹா
காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்