Policeman Attack | தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதற்கு போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதே ஆணிவேர்,
அதை திமுகவினரே செய்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்..
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா காவல்நிலைய உதவி ஆய்வாளர் நாராயணசாமி அவர்களை ரவுடிகள் இருவர் இரும்புக் கம்பிகளால் தாக்கி கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த விடியா ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது, சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்ற நிலைக்கு தமிழ்நாடு தள்ளபட்டு இருப்பதற்கு விடியா அரசுக்கு என் கடும் கண்டனங்கள்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதற்கு போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதே ஆணிவேர்,
அதை திமுகவினரே செய்து வருகின்றனர் என்பது இன்னும் வேதனைக்குரியது.
போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறி, காவல்துறையின் கைகளை கட்டி தமிழ்நாட்டை ரவுடிகள் ராஜ்ஜியமாக மாற்றி இருக்கும்.
இந்த கையாலாகாத அரசினை மக்கள் பேராதரவுடன் விரைவில் வீட்டிற்கு அனுப்புவோம் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1762725754973110556?s=20
காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் (Policeman Attack):
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிங்கவரம் ரங்கநாதர் கோவிலுக்கு செஞ்சியைச் சேர்ந்த வாலிபர்கள் சாமி கும்பிட சென்றுள்ளனர்.
அப்பொழுது சிங்கவரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் செஞ்சியை சேர்ந்த இளைஞர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.
இதில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில்,
காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பு மோதலை தடுக்க முயன்றார்.
அப்பொழுது சிங்கவரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனை கடுமையாக தாக்கியதோடு அவரது சட்டையையும் கிழித்தனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.