நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது பிரின்ஸ் ( prince ) திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் டாக்டர் திரைப்படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து பிரின்ஸ் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த திரைப்படம் நாளை பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சத்தியராஜ் தற்போது பிரிண்ட்ஸ் திரைப்படத்தை முழுவதுமாக பார்த்துவிட்டு திரைப்படத்திற்கான விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.
அதன்படி, நடிகர் சத்யராஜ் அவர்கள் பிரின்ஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரே காமெடியாக இருந்தது என்றும் தான் விழுந்து விழுந்து சிரித்ததாகவும் தன் நண்பர்களிடம் கூறியதாக தகவல் பரவியுள்ளது.