சேலம் எடப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி(EPS) பேசிக்கொண்டு இருந்த போது மதுபோதையில் இருந்த தொண்டர் ஒருவர் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளிபாளையம் பகுதியில் நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.
அப்போது அந்த போது கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு காலம் அதிமுக அரசு பொற்காலமாக இருந்தது.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு லஞ்சம் மற்றும் ஊழலில் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் நிலை தற்பொழுது வந்துள்ளது.
லஞ்சம் கொடுத்தால் மட்டுமே கோரிக்கைகளும் நிறைவேறுகிறது. இதுதான் திராவிட மாடல் அரசின் லட்சணமாக உள்ளது என கடுமையாக விமர்சித்தார். அப்போது மேடையின் கீழே நின்று கொண்டிருந்த தொண்டர் ஒருவர் அதிமுக ஆட்சியை புகழ்ந்தும் அதிமுக ஆட்சி ஆட்சியில் இருந்திருக்கலாமெனவும், திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.
உடனடியாக எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் சைலன்ட் ஆஹா இருப்பா..எனக்கு கால் வலிக்குது.. அப்புறம் பேசிக்கலாம் என்று தெரிவித்தார். அப்படியும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை. அப்போது eps நீ நல்லவர் தான் உனக்கு உள்ள இருக்கிறது சரியில்லையே..என்று மது போதையில் இருந்தவரை பார்த்து சிரித்துக் கொண்டே கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இதனால் அந்த பொதுக்குழு கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. வெயிலின் அருமை நிழலை இழந்த பின்பு தெரியும் என்பதை போல் திமுக ஆட்சியில் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் தான் அதிமுக ஆட்சிக்கான சர்டிபிகேட் என்று ஈபிஎஸ் தெரிவித்திருந்தார்.