சமீப காலமாகவே அதிகம் செய்திகளில் பேசப்படும் நடிகையாக மாறியிருக்கிறார் தென்னிந்திய நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா.
நடிகை சமந்தா தனது காதல் கணவரான நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததில் இருந்தே இவரைப்பற்றி வெளியாகும் ஒவ்வொரு செய்தியும் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
மேலும், சமந்தா தன் விவகாரத்திற்கு பிறகு அதிக கவர்ச்சியில் இறங்கியதும் மற்றும் மும்பைக்கு குடியேறி இருப்பது போன்ற செய்திகள் வைரலான நிலையில், அதன் பிறகு நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற ஒரு ஆட்டோ இம்யூன் குறைபாட்டால் தீவிரமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சமீத்தில் செர்பியாவில் உள்ள பழமையான சர்ச் ஒன்றுக்கு சென்று வந்த சமந்தா அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதோடு ஒரு உருக்கமான பதிவையும் எழுதியுள்ளார்.
அதில், “மயோசிடிஸ் எனும் கொடிய நோயால் அவதிப்பட்டு வந்த எனக்கு கடந்த ஒரு வருடம் பெரிய போராட்டக்களமாக மாறியது. என் உடம்புக்குள் பல போராட்டங்கள் நடைபெற்றதால் சர்க்கரை, உப்பு , பருப்பு வகைகள் என எதையும் உட்கொள்ள முடியாத சூழ்நிலையால், மாத்திரைகள் மட்டுமே உணவாக பல நேரங்களில் என்னை பாடாய் படுத்தியது.
என்னை நானே சுய பரிசோதனை செய்து கொண்டேன் என்று கூட சொல்லலாம். அதே நேரத்தில் தொழில் முறையில் சில தோல்விகள் என்னை மிகப்பெரிய அளவில் பாதித்தது.
என்னுடைய ஓராண்டு கால பிரார்த்தனை, பூஜைகள் ஆகியவை எந்தவொரு பரிசையும் எதிர்பார்த்து கடவுளை பிரார்த்திக்கவில்லை. மன வலிமைக்காகவும், அமைதிக்காகவும் தான் எனது பிரார்த்தனைகள் இருந்தன. சில சமயம் பெரிய வெற்றி என்பது அவசியமில்லை. முன்னோக்கி நகர்வதே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறேன்.
எல்லா நேரத்திலும் நாம் நினைப்பது எல்லாம் நடக்காது என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தது கடந்த ஆண்டு. நாம் ஒரு சிலவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மீதி உள்ளவற்றை விட்டு விட வேண்டும் என்பதை புரிந்து கொண்ட ஆண்டு என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.