கொரோனா என்னும் கொடிய நோய் தொற்று உலக மக்களை வேட்டையாடி ஓய்ந்துள்ள நிலையில் தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் பலவிதமான நோய் தொற்றுகள் உருவாகி மனித இனத்தை அச்சுறுத்தி வருகிறது.
குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய , சீனா உள்ளிட்ட நாடுகளில் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் தற்போது இந்தியாவின் முக்கிய அங்கமாக விளங்கும் தமிழ்நாட்டில் ஸ்கரப் டைபஸ் (Scrub Typhus) என்னும் நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் கடிப்பதால் ஸ்கரப் டைபஸ் நோய் தொற்று ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள் ‘ஸ்கரப் டைபஸ்’ இந்த நோய் தொற்றின் நோயின் முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது .
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், செங்கல்பட்டில் நோயின் தாக்கம் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் ‘ஸ்கரப் டைபஸ்’ நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.
விவசாயிகள், வனப்பகுதியில் வசிப்போர், புதர் மண்டிய பகுதியில் இருப்போர் நோயால் பாதிக்கப்படலாம் என்றும் நோய்க்கு மருத்துவர் பரிந்துரைப்படி அசித்ரோமைசின், டாக்ஸிசைக்கிள் மருந்து தரப்படுகிறது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.