வீடு உபயோக சிலிண்டரின் விலையை அதிரடியாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சில்லறை விற்பனை விலையைக் குறைக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது . இதனைச் சமாளிக்கும் விதமாக மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாயை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை விலையில் எவ்வித மாற்றமும் இருக்காது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Also Read : வரவில்லை என்றால் பிடிவாரண்ட் தான் ஒரே வழி..சீமானுக்கு நீதிபதி இறுதி எச்சரிக்கை..!!
இந்நிலையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலையை ரூ. 50 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு சிலிண்டர் விலையானது 500 ரூபாயில் இருந்து, ரூ. 550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மானிய விலையில் சிலிண்டரை பெறுபவர்களுக்கு 803 ரூபாயில் இருந்து 853 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாளை முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த செய்தி பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.