உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரஷ்ய – உக்ரேன் போருக்கு எதிராக சென்னையில் மாணவர் இந்தியா அமைப்பினர் சார்பில் பதாகை ஏந்தி எதிர்ப்பு பிரச்சாரம் நடைபெற்றது.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா பயங்கர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே, தங்கள் நாட்டையும், மக்களையும் பாதுகாக்க உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷிய வீரர்களை கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யா படை தாக்குதலை கண்டித்து சென்னையில் மாணவர் இந்தியா அமைப்பினர் சார்பில் பதாகை ஏந்தி எதிர்ப்பு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் மாநில பொருளாளர் பஷீர் அகமது, மாணவர் இந்தியா அமைப்பினர் கலந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.மேலும் ஒன்றிய அரசு, விரைந்து இந்திய – தமிழக மாணவர்களை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.