சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி தற்போது செம வைரல் ஆகி வருகிறது.
ஞானவேல் இயக்கும் படத்தில் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்கிறது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் முழு வீச்சில் நடைபெற்றது . அங்கு, ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே நடைபெற்று வருகிறது. மேலும் ‘வேட்டையன்’ படப்பிடிப்பில் ரஜினியுடன் பகத் பாசில் இணைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
விறுவிறுப்புக்கு பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாகி வரும் நிலையில் அந்த புகைப்படத்தில் ரஜினி மற்றும் பகத் பாசில் ஒரு கரும்பலகை அருகே நின்று கொண்டிருப்பது போன்றும் அந்த கரும்பலகையில் அன்னை தெரசாவின் வாசகம் எழுதப்பட்டிருப்பது போன்றும் தெரிகிறது.
இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்கள்…