இயக்குனர் சிவா இயக்கத்தில் தன்னுடைய 42 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்திற்கு சூர்யா 42 (suriya 42) என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். சூர்யாவிற்கு ஜோடியாக “திஷா பட்டானி” நடித்துள்ளார்.
பான் இந்தியா படமா உருவாக்கி வரும் இந்த படம் 2D மற்றும் 3Dல் வெளியாக உள்ளது. மேலும், ஃபேண்டஸி கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தை 10 மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர் பட குழுவினர்.
இதற்காக கோவா,சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தினுடைய (suriya 42) படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இந்த மாதம் 14ஆம் தேதி படத்தின் டைட்டில் அறிவிப்புக்கான சிறப்பு ப்ரோமோ ஒன்று படக்குழு வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு “வீர்” அல்லது “அக்னீஸ்வரன்” என்று டைட்டில் வைக்க இயக்குனர் சிவா ஆலோசித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
மேலும், இந்த படம் பத்து மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், எல்லா மொழிக்கும் பொருத்தமான தலைப்பாக இருக்க வேண்டுமென்று இந்த தலைப்பை வைக்க இருப்பதாகவும் கூறப்டுகிறது.