5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை வென்று குவித்துள்ளது சூரரைப்போற்று திரைப்படம் பெற்றுள்ளது
சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.இந்த படத்திற்கு 5 தேசிய விருத்த்துகள் கிடைத்துள்ளது.
இதில் மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
இந்த திரைப்படம் குறைந்த செலவில் அனைத்து தரப்பு மக்களும் விமான சேவைகளைப் பெற வேண்டும் என்ற நோக்கில் விமானி ஜி.ஆர்.கோபிநாத் சொந்த விமான நிறுவனத்தை எடுத்துக் கொண்ட முயற்சியை கதைகளமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டிருந்தது.
சூரரைப் போற்று படத்தை நடிகர் சூர்யா – ஜோடிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்திருந்தது.
நாளை சூர்யா தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து இது தான் அவருக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு என இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.
சிறந்த பின்னணி இசைக்கான விருதை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பெறவிருக்கிறார்.