சிரியா அதிபர் அசாத் மாஸ்கோவில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றிய நிலையில், அங்கிருந்து தப்பியோடிய அதிபர் பஷர் அல் ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிபர் ஆசாத்துக்கு ஈரான், ரஷ்யா ஆதரவு அளித்து வந்த நிலையில், சிறப்பு விமானத்தில் அவர் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
Also Read : “யாரு சாமி நீ” – 108 ஆம்புலன்சை திருடிய பலே திருடன் கைது..!!
சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸை பிடித்ததுடன் அதிபர் மாளிகையை சூறையாடினர்.
இதையடுத்து விமானத்தில் குடும்பத்துடன் தப்பிச் சென்ற அதிபர் பஷர் அல் ஆசாத், நட்பு நாடான ரஷ்யாவில் தஞ்சம் அடைந்ததாக, பிரபல சர்வதேச ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிரியாவில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில் அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிடக் கூடாது என்று பைடனுக்கு, புதிய அதிபராக பதவியேற்கவுள்ள டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.