திரைப்பட நகைச்சுவை நடிகர் போண்டா மணிஅவர்கள் உடல் நல குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு இரண்டு கிட்னிகள் பாதிக்கப்பட்டு செயல் இழந்ததாக வெளியான சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் பிறந்த தமிழ் நடிகர் போண்டா மணி 1991 ஆம் ஆண்டு கே பாக்யராஜ் இயக்கிய ‘பவுனு பவுனுதன்’ மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் திறமையான நடிகர் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் தமிழ் மலையாளம்,கன்னட போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.
மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பிரபலமான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து புகழ் பெற்றார்.மேலும் கௌடமணி, வடிவேலு, விவேக் போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் போண்டா மணி திரை இடத்தைப் பகிர்ந்துள்ளார். ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ படங்களில் நடித்து அவருக்கு என தனி இடத்தை பிடித்தார்.
200க்கும் மேற்பட்ட படங்களில் முன்னனி காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ள இவர், இலங்கையில் இருந்து வந்து தமிழகத்திலேயே பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மேலும், நடிப்பை தாண்டி சிறிய அளவில் கடை ஒன்றையும் சென்னையில் நடத்தி வருகிறார். நடுத்தரமான குடும்பத்தை சேர்ந்த இவர் கடந்த சில வருடங்களாகவே அடுத்தடுத்து உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வருவதால் அவரது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
58 வயதாகும் போண்டா மணிக்கு, சமீபத்தில் திடீரென இதய கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதை தொடர்ந்து, மீண்டும் இவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு உதவுங்கள் என கண்ணீர் விட்டு கதறியுள்ளார் பிரபல காமெடி நடிகர் பெஞ்சமின்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில் “நடிகர் போண்டா மணி அவர்களுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டதாகவும், தற்போது அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய மேல் சிகிச்சைக்கு உதவுங்கள்.
உங்களுக்கு தெரிந்த அரசியல் தலைவர்களுக்கோ… அல்லது நண்பர்களுக்கோ பகிர்ந்து உதவி செய்யுங்கள். அனாதையாக இலங்கையில் இருந்து வந்து, இங்கேயே திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் அவர், மீண்டும் அனாதையாக பிள்ளைகளை விட்டு விட்டு செல்ல கூடாது என கண்ணீருடன் பேசி இருந்தார்.இந்த நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளைங்களில் வைரலானது.
தனது உடல் நிலை குறித்து போண்டா மணி தெரிவிக்கையில் ,அவ்வப்போது “ஒரு ஆறு மாதமாகவே உடல்நிலை சரியில்லாம இருந்தது. ஒப்புக்கொண்ட புராஜக்ட் எல்லாம் பண்ணனும்னு தொடர்ந்து ஓடிட்டே இருந்தேன். பருவக் காதல்னு ஒரு படத்தில் நடிச்சேன். அந்தப் படத்தில் சாக்கடையில் விழுகிற மாதிரி சீன் எடுத்தாங்க. அவங்க தத்ரூபமாகத் தெரியணும்னு நிஜ சாக்கடையில் என்னை விழ வச்சிருக்காங்க.
அந்த சாக்கடை தண்ணீர் உடம்புக்குள் போனதால நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக அந்தப் படப்பிடிப்பு தளத்திலேயே மூச்சுத்திணறி மயக்க மடைந்ததாகவும் தொடர்ந்து சிகிச்சை எடுத்துட்டு வந்தேன். மேலும் பத்து நாள் ரெஸ்ட் எடுத்துட்டு கமிட் பண்ணின வேலைகளை செய்யணும்னு பல ஊர்களுக்கு டிராவல் பண்ணினேன்.
அப்பப்ப மூச்சுத்திணறல் ஏற்பட்டுச்சு. ஓமந்தூரார் மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை பண்ணினாங்க. தொடர்ந்து மூச்சு விட சிரமப்பட்டுட்டே இருந்தேன். இப்ப சமீபத்தில் தான் ரெண்டு சிறுநீரகமும் செயலிழந்த விஷயம் தெரிஞ்சது. எல்லோரையும் சிரிக்க வைச்சேன். இறுதியாக, என் வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு துயரம் ஏற்பட்டதை தாங்கிக்க முடியல என்று அவர் கூறிய வார்த்தைகள் அதிர்ச்சியடைய வைத்தது.என்று தெரிவித்துள்ளார்.