ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா கலை மற்றும் கலாச்சாரத் துறையில் சிறந்த நபர்களுக்கு வழங்கப்படுகிறது. UAE கோல்டன் விசாவின் காலம் 10 ஆண்டுகள். முன்னதாக மலையாள திரையுலக நட்சத்திரங்கள் உள்பட பலர் யுஏஇ கோல்டன் விசா பெற்றுள்ளனர்.
கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், டோவினோ தாமஸ், பிருத்விராஜ், ஜெயசூர்யா, துல்கர் சல்மான், ஆஷா சரத், ஆசிப் அலி, மீரா ஜாஸ்மின், மீனா, இவாலா பாபு, சித்திக், சுராஜ் வெஞ்சாரமூடு, பிரணவ் மோகன்லால், மனோஜ் கே ஜெயன், நிவின் பாலி. நடிகர்கள் திலீப், பாடகி கே.எஸ்.சித்ரா, பாடகர் எம்.ஜி.ஸ்ரீகுமார், தயாரிப்பாளர்கள் ஆண்டன் ஆண்டனி, நாதிர்ஷா, ஆண்டனி பெரும்பாவூர், இயக்குநர்கள் சலீம் அகமது, சந்தோஷ் சிவன் உள்ளிட்டோரும் தங்க விசா பெற்றுள்ளனர். நடிகையும் தொகுப்பாளருமான நைலா உஷா மற்றும் தொகுப்பாளரும் நடிகருமான மிதுன் ரமேஷ் ஆகியோர் மலையாள திரையுலகில் இருந்து கோல்டன் விசா பெற்றுள்ளனர்.
இந்த நிலையில்,திரைப்பட நடிகை பாவனாவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா. துபாயில் உள்ள முன்னணி அரசு சேவை வழங்குநரான ECH டிஜிட்டல் நிறுவனத்தின் தலைமையகத்தில் தலைமை நிர்வாக அதிகாரி இக்பால் மார்கோனி பாவனாவுக்கு கோல்டன் விசாவை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விசா பெறுவதற்காக வெள்ள நிற டாப் அணிந்து சென்றிருந்தார் பாவனா. இ.சி.ஹெச் நிறுவன சி.இ.ஓ இக்பாலிடம் இருந்து கோல்டன் விசாவை பாவனா பெற்றுக்கொண்டத்தை அடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாவனாவின் சில வீடியோக்களும், போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. பாவனா டாப் மட்டும் அணிந்து வந்ததாகவும், அதனால் கையை உயர்த்தும்போது அவரது உடல் தெரிந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
கோல்டன் விசா வாங்க சென்ற பாவனாவின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த நெட்டிசன்கள், பாவனவாக்கு எதிராக கடும் விமர்சனங்களையும் முன்வைத்தனர். ஆனால் அது பார்க்கும் நபர்களின் மனதின் வெளிப்பாடு என சிலர் சமூக வலைதளங்களில் பாவனாவை ஆதரித்து பதிவிட்டனர். விமர்சனங்கள் அதிகரித்ததை அடுத்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் பாவனா.
இத குறித்து நடிகை பாவனா கூறுகையில், “கை உயர்த்தும்போது தெரிந்தது உடல் அல்ல. அந்த உடையில் டாப்புடன் ஸ்லிப் என்ற பகுதியும் சேர்ந்துதான் வருகிறது. ஸ்லிப் என்பது உடலின் நிறத்தில் உடலுடன் சேர்ந்து இருக்கும் டாப்பின் ஒரு பகுதிதான். இது புதிய கண்டுபிடிப்பு ஒன்றும் இல்லை. அந்த ஆடையை பயன்படுத்தியவர்களுக்கு அது தெரியும்.
டாப் மட்டும் அணிந்துகொண்டு வெளியே போகும் நபர் அல்ல நான். எது கிடைத்தாலும் அதை வைத்து என்னை வேதனைப்படுத்தும் சிலர் உள்ளனர். என்னைப்பற்றி அவதூறும், பொய்யும் கூறுவதில் அவர்களுக்கு ஆனந்தம். இதன் மூலம் அவர்களின் மனதுக்கு சந்தோஷமும், சுகமும் கிடைக்கும் என்றால் கிடைக்கட்டும். அவர்களை எதிர்ப்பதற்கும், அவர்களுக்கு பதில் சொல்லவதற்கும் ஒன்றும் இல்லை” என்று தெரிவித்த அவர் இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.ஆடையின் பெயரால் நடக்கும் தாக்குதல்களுக்கு ஆதரவாக பதிலடி கொடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.