இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.

இந்த திருமணத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட திரைபிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

வாடகை தாய் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு வாடகைத் தாய் மூலம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை பெற்றது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் ஒரு வருடத்தில் நிறைய ஏற்றத் தாழ்வுகள், சோதனைகள் என பல விஷயங்கள் நடந்துள்ளன; ஆனால், இந்த அன்பு நிறைந்த குடும்பத்தை பார்க்கும்போது மீண்டும் நம்பிக்கை பிறக்கிறது;

கனவை நோக்கி பயணிப்பதற்கான ஆற்றல் கிடைக்கிறது; குடும்பம் அளிக்கும் வலிமை சிறந்தது; சிறந்த மனிதர்களால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்”என தெரிவித்துள்ளார்.