தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உடல்நலக்குறைவால் காலமானார்.
கேரள மாநிலம் பத்தினம்திட்ட பகுதியை சேர்ந்த பாத்திமா பீவி, உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆவார். இவர் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தமிழக ஆளுநராக புதியவர் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
அந்த கோரிக்கையின் அடிப்படையின் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் பாத்திமா பீவி.
கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாத்திமா பீவி, கொல்லம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.