அமைதி மாநிலமாக இருந்த தமிழகம் இன்று போதைப்பொருள் மாநிலமாக (eps protest) மாறியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் போதை பொருள் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :
அமைதி மாநிலமாக இருந்த தமிழ்நாடு தற்போது போதைப்பொருள் மாநிலமாக மாறியுள்ளது . நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தால் தமிழ்நாடு சீரழிந்து வருகிறது.
இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகளவில் புழங்குகிறது
கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழ்நாட்டில் ரூ.150 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Also Read : https://itamiltv.com/eps-conducting-protests-to-protect-people-sellur-raju/
மொத்த போதைப்பொருட்களையும் விற்கும் இடமாக தமிழகம் மாறியுள்ளது . பல ஆயிரம் கோடி போதைப்பொருளை விற்று அரசியல் கட்சிகளுக்கு கொடுத்துள்ளார் ஜாபர் சாதிக்.
மத்திய அதிகாரிகள் போதைப்பொருளை பிடிக்கும் நிலையில் மாநில அதிகாரிகள் என்ன செய்கிறார்கள். தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தாத முதல்வர் தார்மீக பொறுப்பேற்று (eps protest) பதவி விலக வேண்டும் என்றும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.