பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் போட்டியாளரும் நடிகையுமான ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-1 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கர்நாடக மாடல் அழகி ரைசா வில்சன். பிக்பாஸ்-1 நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ்-1 நிகழ்ச்சியில் தன்னுடன் சக போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் கதாநாயகியாக ரைசா தமிழில் அறிமுகமானார்.

அதன் பிறகு ‘எஃப்ஐஆர்’ மற்றும் ‘காபி வித் காதல்’ ntk உள்ளிட்ட படங்களில் ரைசா நடித்திருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் ‘கருங்காப்பியம்’ எனும் படம் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் அதாவது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரைசா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அழும் புகைப்படங்களை பதிவிட்டு,சில 🥹😭😭😭கேப்ஷனையும் பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் ரைசாவின் புகைப்பட கேப்ஷனை பார்த்த பிரபலங்களும் பிறகு ரசிகர்களும் குழப்பம் அடைந்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர் .தற்பொழுது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.