தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.
உலகையே அச்சுறுத்திய வரும் கொரோனா என்னும் கொடிய தொற்று, உருமாறிகொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா என்னும் கொடிய வைரஸ், தற்போது ஒமைக்ரான் வைரசாக உலக முழுவதும் பரவிக்கொண்டு இருக்கிறது.
என்றாலும், “தமிழகத்தில் இது வரை யாருக்கும் ஒமைக்ரான் பரவல் கண்டறியப்படவில்லை” என்று, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.அதே நேரத்தில், தமிழகத்தில் தற்போது வரை 7 கோடியே 74 லட்டத்து 53 ஆயிரத்து 917 பேர் கொரோனாவுக்கு தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள்.
அத்துடன், தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. ஆனால், தற்போது புதிதாக பரவத் தொடங்கியிருக்கும் ஒமைக்ரான் பற்றிய பீதி, பொது மக்கள் மத்தியில் தொற்றிக்கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வருகிற 15 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது.இதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளைய தினம் திங்கட் கிழமை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
அதன் படி, சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும், தமிழகத்தில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருக்கும் சூழலில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை இன்னும் நீட்டிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் தீவிரமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
இவற்றுடன், தமிழகத்தில் இன்னும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? அல்லது தற்போது இருகு்கும் இதே நிலை தொடரலாமா? என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீவிரமாக ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த முக்கியமான ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.