நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து விட்டனர்.
இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் விஜய் எப்போது இணைய போகிறார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்த திரைப்படம் குறித்து பல அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.தளபதி 67 ( thalapathy 67 ) படத்தில் ஆறு முன்னணி நடிகர்கள் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி சஞ்சய்தத்,பிரித்திவ்ராஜ்,கௌதம் மேனன்,மன்சூர் அலிகான் ஆகியோரின் பெயர்கள் இந்த கதாபாத்திரங்களில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும்,இந்த படத்தில் சமந்தா,திரிஷா,கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.இப்படி அடுத்தடுத்து இந்த திரைப்படம் குறித்து பல அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில்,இதற்கு முன் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் ஏஜென்ட் டீனாவாக வந்த வசந்தி மாஸ்டர் தற்போது தளபதி 67-லும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
விக்ரம் திரைப்படத்தில் ஆக்ஷன் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமைந்த கதாபாத்திரம் டீனா அதேபோல் தளபதி 67 ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் என்று கூறப்படுவதால் ஏஜென்ட் டீனா அந்த திரைப்படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது.பல வருடங்களாக டான்சராக இருந்த வசந்தி ஏஜென்ட் டீனாவாக அறிமுகமான பிறகு தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது