ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே ஆவலுடன் காத்திருந்த தளபதியின் லியோ திரைப்படம் இன்று கோலாகலமாக வெளியாகி உள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் தளபதி விஜய்யுடன் சேர்ந்து திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தென்னிந்தியாவில் கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் இப்படம் ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெளியாகி உள்ளது .
IMAX தொழில்நுட்பத்தில் உருவாகும் 3வது தமிழ்ப்படம் மற்றும் முதல் விஜய் படம் என்பதால் லியோ மீதான எதிர்பார்ப்பு கற்பனைக்கும் அப்பாற்பட்டுள்ளது .மேலும் ரசிகர்கள் அனைவரும் லியோ படம் LCU வில் இருக்கிறதா இல்லையா என கேள்வி கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில் இப்படம் LCU வில் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தளபதியின் விஜய்யின் லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் போது ஒரு ஜோடி திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர் அப்போது அங்கு ஒன்றுகூடிய ரசிகர்கள் அந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர் . இதையடுத்து அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது செம வைரல் ஆகி வருகிறது.