விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள புதிய படத்தின் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக உள்ள நிலையில், இவருடைய படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்னரே வெளியான நிலையில், ஜேசன் சஞ்சய் படத்துக்கான கதையை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.
மறுபக்கம், ஜேசன் சஞ்சய்-யை பல்வேறு முன்னணி இயக்குநர்கள் நடிகராக நடிக்க வைக்க அணுகிய போதிலும் அவர் மறுத்துவிட்டார்.
ஏனெனில், அவர் இயக்குநராக அறிமுகமாக வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தது தான். இதனிடையே தான் தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கம் படத்தில் கதையின் நாயகனாக சந்தீப் கிஷன் நடிப்பது உறுதியாகி உள்ளது.
இதையும் படிங்க : கல்வியின் முக்கியத்துவம் தெரியாத தமிழக அரசு – அன்புமணி குற்றச்சாட்டு!!
ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷன் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகிறது. விரைவில் இந்தக் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேசன் சஞ்சய் பெரிய நாயகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று தான் முதலில் விரும்பினார். ஆனால், முன்னணி நடிகர்கள் யாரிடமும் தேதிகள் இல்லாத காரணத்தினால் இப்போது சந்தீப் கிஷனை வைத்து படத்தினைத் தொடங்கவுள்ளார்.
இந்த சூழலில் தற்போது சந்தீப் கிஷன் உடன் படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.