நடிகர் விஷாலின் ’மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ’மார்க் ஆண்டனி” திரைப்படத்தில் நடிகர் விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விஷாலுடன் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள மார்க் ஆண்டனி படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப் படத்தை வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக கோபுரம் பிலிம்ஸின் பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் படங்களை தயாரிக்க கடன் வாங்கியுள்ளார். இதன் மூலம் அவர் பெற்ற ரூ.21.29 லட்சம் கோடி கடனை லைகா புரொடக்சன் நிறுவனம் ஏற்று செலுத்தியது.
லைகா நிறுவனத்துக்கு விஷால் தரவேண்டிய பணத்தை நடிகர் விஷால் செலுத்தவில்லை. இதனை அடுத்து இந்தக் கடனை நடிகர் விஷால் இன்று வரை செலுத்தவில்லை என லைகா வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை விஷால் செயல்படுத்த தவறியதால் அவரை செப்டம்பர் 12 ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷாலின் ’மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ பட வெளியீட்டுக்கு முன்பும் இப்படியான சிக்கலை லைகா நிறுவனம் விஷாலுக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.