தளபதி விஜய் மற்றும் லோகேஷ் ஆகியோரின் முரட்டு தனமான காம்போவில் வெளியான லியோ படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ‘நான் ரெடி’ வீடியோ பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் கடந்த மாதம் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தில் தளபதி விஜய்யுடன் சேர்ந்து திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் சூப்பர் ஹிட் பாடலான நான் ரெடி பாடலின் முழுமையான வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. சுமார் 2000 நடன கலைஞர்களுடன் படு பிரம்மாண்டமாக உருவான இப்பாடலில் விஜய் மற்றும் மடோனா செபாஸ்டியன், அர்ஜுன், மன்சூர் அலிகான் ஆகியோர் மாஸாக ஆடிருப்பார்கள்.

பட்டிதொட்டி எங்கும் பட்டயகிளப்பிய இப்பாடலின் முழு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது .