மாணவன் சின்னத்துரை சந்திராசெல்வி ஆகியோர் மீது சாதிய கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட நாங்குநேரிக்கு நேரில் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் மாணவன் மீதான கொலைவெறித் தாக்குதலை கண்டு அதிர்ச்சியில் உயிரிழந்த கிருஷ்ணன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் உதவித்தொகையும் வழங்கியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது தங்கையை , சக வகுப்பு மாணவர்களே வீடு புகுந்து அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த கொடூர சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவனும் அவரது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் மாணவன் சின்னத்துரை சந்திராசெல்வி ஆகியோர் மீது சாதிய கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட நாங்குநேரிபெருந்தெருவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்த திருமாவளவன் மக்களை குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது மிக அவதிக்குள்ளாகி இருக்கும் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும், பேருந்து நிலையம் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மக்கள் முன்வைத்தனர் .
இதையடுத்து மாணவன் மீதான கொலைவெறித் தாக்குதலை கண்டு அதிர்ச்சியில் உயிரிழந்த கிருஷ்ணன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் உதவித்தொகையும் வழங்கியுள்ளார் தொல்.திருமாவளவன் .