தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் , சிவாஜி, ஜெமினிகணேசன் , நாகேஷ் ,ரஜினி ,கமல் போன்றோரை எப்படி நாம் மறக்காமல் இருக்கிறோமோ அவர்களை வைத்து படம் இயக்கிய பாரதிராஜா, பாலச்சந்தர் , பாலு மகேந்திரா போன்றோரை தமிழ் சினிமாவும் , சினிமா ரசிகர்களும் நிச்சயம் மறக்க மாட்டார்கள்.
இதில் இயக்குநர் சிகரம் பாரதிராஜா இன்று புகழ் பெற்ற பிரபலன்களாக இருக்கும் பல நடிகர், நடிகைகளை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக நடிகை ரேவதி, நடிகர் பாண்டியன், சுதாகர், ராதிகா போன்றோரை பாரதிராஜாதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வளர்த்துவிட்டார்.
பாரதிராஜாவின் இளமை காலத்தில் அவர் இயக்கிய படங்கள் யாவும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தன. குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான தரமான படத்தை எடுக்கும் வித்தையை அவர் நன்றாக கற்று வைத்திருந்தார் . அந்த காலத்தில் அவருக்கு போட்டியாக யாரும் கிட்ட கூட நெருங்க முடியவில்லை . அந்த அளவிற்கு அவர் புகழின் உச்சத்தில் இருந்தார்.
என்னதான் பலர் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவர் நிராகரித்த சிலர் இன்று தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக உருமாறி உள்ளனர் . ஒரு பேட்டியில் இதுகுறித்து பாரதிராஜா கூறும்போது :
பல நல்ல நடிகர்களை நான் வாய்ப்பு கொடுக்காமல் நிராகரித்துள்ளேன். ஆனால் அவர்கள் எல்லாம் இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து ஜாம்பவான்களாக உயரங்ந்துள்ளனர் . அதில் முதல் நபர் மணிரத்னம் தான் .
மணிரத்னம் முதன் முதலில் என்னிடம் கதை சொல்வதற்காக வந்தார். அப்போது என்னிடம் தொடர்ந்து அவர் ஆங்கிலத்திலேயே நீண்ட நேரம் பேசினார். அப்போதெல்லாம் எனக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது. அதனால் அவரை நிராகரித்து அனுப்பிவிட்டேன்.
நடிகர் சூர்யா, நடிகை சிம்ரன் இவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் என்னிடம் வாய்ப்பு கேட்டு பல முறை வந்துள்ளனர் . அப்போது நான் அவர்களுக்கு வாய்ப்பளிக்க மறுத்துவிட்டேன். இப்போது அவர்கள் அனைவருமே பெரும் உச்சத்தை தொட்டு வானோக்கி உயர்ந்துள்ளதாக பாரதிராஜா கூறியுள்ளார் .