ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது அதிமுக சிதறும் ( EPS SPEECH ) என்ற முதல்வரின் எண்ணம் எப்போதும் ஈடேறாது என தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தற்போது களத்தில் இறங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :
அதிமுகவை பற்றி யார் தவறாக பேசினாலும் அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள்; அதிமுகவை அழிக்க இந்த பூமியில் எவரும் பிறக்கவில்லை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோவார்கள்
Also Read : https://itamiltv.com/alliance-without-policy-is-india-alliance-seaman/
ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது அதிமுக சிதறும் என்ற முதல்வரின் எண்ணம் எப்போதும் ஈடேறாது.
முதலமைச்சருக்கு தேர்தல் ஜூரம் வந்து விட்டதால் புளுகிக் கொண்டிருக்கிறார்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறுகளை கட்டவிழ்த்து விடுகிறார்; ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது தான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி தரப்பட்டது; ஏழை, எளிய மக்களுக்காக திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தியது அதிமுக அரசு தான்
ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு யார் காணாமல் போவார்கள் என பார்க்கலாம்; ( EPS SPEECH ) அதிமுகவை யாரும் மிரட்டிப் பார்க்க முடியாது; எந்த பூச்சாண்டிக்கும் அதிமுக அஞ்சாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.