ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் களம் காணும் அனைத்து அணிகளும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து நடை பெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன.
இந்த இரண்டு அணிகளும் இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
அணியில் கேப்டன் மாற்றம், அணியின் வீரருக்கு கொரோனா தொற்று பாதிப்பு என பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் களம் காணும் ஹைதராபாத் அணிக்காக ஜேசன் ராய் இன்று ஆடும் லெவனில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.