ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கி அம்மாவட்டம் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் . ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது .
அருவிகளில் நீர் வரத்து அதிகமானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தும் பரிசல் இயக்கவும் தடை விதித்து அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், ஒகேனக்கல் அருவிகளில் தற்போது நீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பரிசல் இயக்க தடை தொடருவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் தற்போது அருவிகளில் மகிழ்ச்சியுடன் நீராடி வருகின்றனர்.