திமுகவின் இரண்டு கவுன்சிலர்கள் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாக பொதுமக்கள் ( DMK councilors ) கோரியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :
சட்டப்பேரவையில் கள்ளச்சாராய மரணம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி தரவில்லை; சட்டப்பேரவைத் தலைவர் நடுநிலையாக நடக்கவில்லை . பேச அனுமதி வேண்டி தொடர்ந்து குரல் கொடுத்தோம் என்பதால் எங்களை வெளியேற்றியுள்ளனர்; மக்களின் பிரச்னையை பேசவிடாமல் எங்களை அடக்கி ஒடுக்க நினைக்கும் போக்கு கண்டனத்திற்குரியது.
Also Read : அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றிய காவலர்கள்..!!
திறமையற்ற அரசாங்கத்தால் கள்ளச்சாராயம் அருந்தி பலரும் உயிரிழந்துள்ளனர்; மக்கள் அதிகம் நடமாடும் மைய பகுதியில் 3 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை நடந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருந்துகள் போதிய அளவில் இருப்பதாக அரசு கூறுவது பச்சை பொய்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் இப்படி ஒரு கோர சம்பவம் நிகழ்ந்து ( DMK councilors ) நேரில் வந்து பார்க்காமல் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.