நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார்.குடும்ப ரசிகர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த வருகிறார்.
மேலும்,இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ்,பிரபு,சரத்குமார்,கணேஷ் வெங்கட்ராமன் ஷாம்,குஷ்பூ,சங்கீதா,யோகிபாபு,சம்யுக்தா போன்ற பலர் நடித்து வருகின்றனர்.இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நவம்பர் 5 வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது.இந்த பாடலுக்கான ப்ரோமோ இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் இன்று வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது. இதனையொட்டி படக்குழு தற்போது இந்த பாடலுக்கான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் இடம் பெற்றுள்ளன.
மேலும் ரஞ்சிதமே பாடல் எப்படி உருவாகியிருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.மேலும் இந்த பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளதால் விஜயின் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் எழுந்துள்ளது.