நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை என்ற நீதிபதியின் அறிவிப்புக்கும் , தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தமையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி. சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாண்பமை மெட்ராஸ் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா அவர்களைச் சந்தித்து இது குறித்து லோசனை மேற்கொண்டார்.
தலைமை நீதிபதியிடம் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை சட்டத்துறை அமைச்சர் கடிதம் வழங்கி நேரில் தெரிவித்தார் .
தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி , நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் (Status Quo to be continued) எனத் தெரிவித்தார், இத்தகவல் வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் உடனே தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை என்ற நீதிபதியின் அறிவிப்புக்கும் , தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தமையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இதுகிறித்து திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது :
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படம் மற்றும் திருவுருவச் சிலை ஆகியவற்றை நீதிமன்ற வளாகங்களில் அப்புறப்படுத்தும் படி எந்த ஆணையும் பிறப்பிக்கபடவில்லை என்பதை தமிழ்நாடு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுக்கும் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் மாண்புமிகு சட்ட அமைச்சர் ரகுபதி அவர்களுக்கும் உயர்நீதிமன்றத் தலைமை_நீதிபதி அவர்களுக்கும் விசிக சார்பில் எமது நெஞ்சார்ந்த நன்றி என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் .\